மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.;

Update:2022-09-24 00:11 IST

ராமேசுவரம், 

பாம்பனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாபேட்ரிக் கலந்து கொண்டு 12-வது வகுப்பு படிக்கும் 61 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா இலவச சைக்கிள்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேட்ரிக், மற்றும் வார்டு உறுப்பினர்கள் சரண்யா, மணிமேகலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரகாசி, துணை தலைவி ரெய்ச்சல் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்