இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம்

பட்டிவீரன்பட்டியில் இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-05-11 19:00 GMT

பட்டிவீரன்பட்டியில் என்.எஸ்.வி.வி. பள்ளிகள் மற்றும் கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் இணைந்து இலவச கூடைப்பந்து பயிற்சி முகாமை நடத்துகிறது. அதன் தொடக்க விழா என்.எஸ்.வி.வி.மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் சாலிடான் டெக்னாலஜிஸ் நிறுவனர் மேகலா தேவராஜ் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் என்.எஸ்.வி.வி. பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவர் முரளி, கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் நிர்வாக அதிகாரி விக்ரம் அர்ஜுன், என்.எஸ்.வி.வி.மெட்ரிக் பள்ளி தலைவா் கோபிநாத், செயலாளர் பிரசன்னா, பள்ளி முதல்வர் ஆத்தியப்பன், தலைமை பயிற்சியாளர் ஜான்சன் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முகாம் குறித்து அமைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், மாணவ, மாணவிகளிடம் ஆரோக்கியம். நன்னடத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சமூக வலைத்தளங்களில் சிக்காமல் கூடைப்பந்தாட்ட அடிப்படைத்திறனை கற்று விடுமுறை நாட்களில் விளையாடுவதற்காகவும் முகாம் நடத்தப்படுகிறது. வருகிற 25-ந்தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. இம்முகாமில் பட்டிவீரன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 6 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் சேரலாம். முகாமின்போது காலை உணவு மற்றும் நிறைவு நாளில் சீருடை, சான்றிதழ், கோப்பை வழங்கப்பட உள்ளன. கிராமபுற மாணவர்களிடம் கூடைப்பந்தாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்க வைப்பதே முகாமின் நோக்கம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்