கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி

தேனியில் கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-21 21:30 GMT

தேனி அருகே வடபுதுபட்டியை சேர்ந்தவர் சத்யா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரிடம், அதே ஊரை சேர்ந்த குமரேசன், காயத்ரி ஆகியோர் கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதற்காக ரூ.3½ லட்சம் செலவாகும் என்றனர். இதனை நம்பிய சத்யா, தன்னிடம் வைத்திருந்த ரூ.3½ லட்சத்தை குமரேசன், காயத்ரி ஆகியோரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கிதராமல் அலைக்கழிப்பு செய்தனர்.

இதுகுறித்து சத்யா கேட்டபோது, அவர்கள் முறையான பதில் கூறாமல், பணத்தை திருப்பிதரவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சத்யா, இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி, அல்லிநகரம் போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து குமரேசன், காயத்ரி ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்