வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாக முதியவரிடம் ரூ.45 லட்சம் மோசடி - முன்னாள் பெண் உதவி மேலாளருக்கு வலைவீச்சு

வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாக முதியவரிடம் ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட முன்னாள் பெண் உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-03 08:57 GMT

சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் முத்தர் (வயது 70). இவர், கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு வங்கியில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ரூ.45 லட்சம் டெபாசிட் செய்தார். அப்போது வங்கியில் உதவி மேலாளராக இருந்த அப்சனா (45) என்ற பெண், முதியவரிடம் இருந்து ரூ.45 லட்சம் பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை கொடுத்தார்.பின்னர் எந்த தகவல் என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்ணை கொடுத்து அனுப்பி உள்ளார். கடந்த சில மாதங்களாக முதியவர் வங்கி உதவி மேலாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முதியவர், வங்கிக்கு நேரில் சென்று மேலாளர் முரளி என்பவரிடம் கேட்டபோது உதவி மேலாளர் அப்சனா, 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றதாக தெரிவித்தார். மேலும் முதியவர் வங்கி கணக்கில் ரூ.45 லட்சத்தை டெபாசிட் செய்யாமல் அப்சனா தனது வங்கி கணக்கில் செலுத்தியதும் தெரியவந்தது.

இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வங்கி முன்னாள் பெண் உதவி மேலாளரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்