தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.37 லட்சம் மோசடி; மேலாளர் கைது

வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.37 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Update: 2022-10-07 20:40 GMT

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் செங்கலநாட்சியார்புரம் வெள்ளையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 27) கிளை மேலாளராகவும், தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த பெருமாள்ராஜ் வட்டார மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நிதி நிறுவனத்தில் குழுவில் கடன் பெற்ற 216 பயனாளர்களிடம் இருந்து தவணை தொகையை பெற்று அதனை அவர்களின் கணக்கில் வரவு வைக்காமல் சுமார் ரூ.37 லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த நிதி நிறுவன மேலாளர் ஜெய்சிங் பிரபு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு கொடுத்தார். அவர் அந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகுவிற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட ரமேசை கைது செய்தனர். பெருமாள்ராஜை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டு தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்