என்ஜினீயரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி

வீட்டிலிருந்தே அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி என்ஜினீயரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி நடைபெற்றது.

Update: 2022-08-25 17:08 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள தேரிருவேலியை சேர்ந்தவர் நூருல்அமீன் (வயது 32). என்ஜினீயரிங் படித்துவிட்டு ஊரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலைவில் இன்ஸ்டாகிராமில் வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கலாம் என்று வந்த விளம்பரத்தை பார்த்து அந்த இணைப்பிற்குள் சென்றுள்ளார். அது வாட்ஸ்-அப் எண்ணிற்குள் சென்ற நிலையில் அதில் வந்த குறுந்தகவலில் தினமும் ரூ.1000 முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த இணைப்பிற்குள் சென்றபோது டெலிகிராம் குரூப்பிற்கு சென்று நூருல்அமீன் விவரங்களை கேட்டுள்ளது. அதனை பதிவு செய்த நிலையில் அவர்கள் சொல்வது போல் குறிப்பிட்ட பொருட்களை வாங்கி ரூ.227 மற்றும் ரூ.1066 லாபமாக கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நூருல்அமீன் மேலும் அதிக லாபம் பெறும் நோக்கில் அவர்கள் குறிப்பிட்டபடி 7 பணிகளை முழுமையாக செய்து குறிப்பிட்ட பொருட்கள் அதிக கமிஷன் கிடைக்கும் என்று எண்ணி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 865 வரை செலுத்தி உள்ளார். அதன்பின்னர் தனது கணக்கில் சேர்ந்த லாப தொகையான ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 668 எடுக்க முயன்றபோது எடுக்க முடியாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த நூருல்அமீன் அவர்களின் எண்களை தொடர்பு கொண்ட போது அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்