துணை சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
துணை சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் 15-வது நிதி குழு மானியத்தின் (பொது சுகாதாரம்) கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, ஒன்றியக்குழு உறுப்பினர் மஞ்சுளா மாசிலாமணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார், ஒன்றிய பொறியாளர் செந்தில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.