ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டு விழா
ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;
சாயர்புரம்:
சாயர்புரம் நகர பஞ்சாயத்து இருவப்புரம் 6-வது வார்டு மணல்காடு அய்யர்மடை அருகே ஊர் பொதுமக்கள் நலன் கருதி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக ரூ.5 லட்சம் செலவில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சாயர்புரம் நகர பஞ்சாயத்து தலைவி பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். மணல்காடு ஊர் தலைவர் சுரேஷ், பொருளாளர் நாகராஜ், தர்மகர்த்தா முத்துக்குமார், 6-வது வார்டு கவுன்சிலர் முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.