முன்னாள் எம்.பி. வசந்தகுமார் நினைவு தினம்
பாளையங்கோட்டையில் முன்னாள் எம்.பி. வசந்தகுமார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
இட்டமொழி:
மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமார் 3-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, வட்டார தலைவர்கள் கணேசன், நளன், நிர்வாகிகள் ஜேம்ஸ்போர்டு, ராமநாதன், அப்பாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.