ஒ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர்.;
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது.
இதனிடையே சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்தது.
இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர். அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை என செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.