முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.;

Update:2023-03-02 23:00 IST

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் வருகின்றனர்.

இதேபோல் சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது வந்து தரிசனம் செய்கின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பழனிக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னாள் அமைச்சருடன், அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர். பின்னர் மீண்டும் ரோப்கார் வழியாக இறங்கி செல்லூர் ராஜூ காரில் புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்