வனவேங்ைக கட்சியினர் மறியல்

வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனவேங்ைக கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-24 20:31 GMT

ராஜபாளையம். 

வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனவேங்ைக கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

ராஜபாளையத்தில் குறவர் பெயரில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனவேங்கை கட்சியினர் மலையடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் நேற்று காலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மாலையில் விடுவிக்கப்பட்ட நிலையில் திடீரென ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் வனவேங்கை கட்சியினர் சிலர் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் தடியடி

இதுகுறித்து தகவல்அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கல் வீசி தாக்குதல்கள் நடத்தியதால் போலீசார் 2 பேருக்கும், வனவேங்கை கட்சியை சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் பழைய பஸ்நிலையம் முதல் காந்தி சிலை வரை உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்