குன்னூர்,
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதற்கிடையில் குன்னூர் காந்திபுரம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் முனீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. அங்கு புல்வெளிகள், மரங்கள் பற்றி எரிந்தது.
அப்பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் செல்ல முடியாததால், வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இந்தநிலையில் வனத்துறையினர் சிரமத்திற்கு மத்தியில் காட்டுத்தீயை போராடி அணைத்தனர். மேலும் வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், மழை பெய்தால் மட்டுமே காட்டுத்தீ அபாயம் நீங்கும்.