கன்னியாகுமரியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேட்டி, சேலை உள்ளிட்ட உடைகளை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி,
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடி பகுதியில் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் அரவிந்த், தனது குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.
மேலும் நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகளில் அங்குள்ள மக்கள் பொங்கல் வைத்தனர். இதில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும் வேட்டி, சேலை உள்ளிட்ட உடைகளை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இந்த விழாவில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலைகள் நடைபெற்றன.