திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்...!!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
திருச்சி,
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழகத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வெளிநாட்டு பண நோட்டுகளை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்திய சோதனையில் செல்போன் மற்றும் பவர் பேங்கில் மறைத்து வைத்து சவுதி அரேபிய பணமான ரியாலை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய அளவில் அதன் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என தெரிய வருகிறது. அவரிடம் இருந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.