பள்ளிவாசல்நிர்வாகிகளுக்கு கொலைமிரட்டல்

காயல்பட்டினத்தில் பள்ளிவாசல்நிர்வாகிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-07-08 10:08 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்்த முகமது அபூபக்கர் மகன் கசாலி மரக்காயர்(வயது 52). இவர் இப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் ஜமாத் தலைவராக உள்ளார். பள்ளிவாசல் அமைந்துள்ள தெருவில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2-ந்தேதி அப்பகுதியில் உள்ள 2 வீடுகளில் வசிப்பவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக ஒருவர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகநேரி போலீசார் அந்த தகராறு நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்வதற்காக பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் அனுமதிபெற்று, அந்த நேரத்தில் பதிவான காட்சிகளை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த மற்றொரு வீட்டை சேர்ந்த முகமது ஹனிபா மகன் கோஸ் முகமது மறுநாள் மாலையில் தெருவில் உள்ள 2 கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தினாராம், இதை தட்டிக்கேட்ட பள்ளிவாசல் தலைவர் கசாலி மரைக்கார் மற்றும் நிர்வாகிகளை தாக்க முயன்றதுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம். இது தொடர்பாக பள்ளிவாசல் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து கோஸ் முகமதுவை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்