அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்குபொங்கல் பரிசுதொகுப்பு வினியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு ரேஷன்கடைகளில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-01-10 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு ரேஷன்கடைகளில் அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

பொங்கல்பரிசு தொகுப்பு

செட்டியாபத்திலுள்ள உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் தலைமை வகித்து பொருட்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குலசேகரன் பட்டினம் ஊராட்சி துணைத் தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூளத்தெரு, புதுமனை, குலசேகரன்பட்டினம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கி வைக்கப்பட்டது.

பண்டாரவிளை

ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெருங்குளம் பேரூர் தி.மு.க. செயலாளர் நவநீதமுத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துலுக்கர்பட்டி

துலுக்கர்பட்டி ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கழுகுமலை ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். தெற்கு கழுகுமலை பஞ்சாயத்து தலைவர் நாகஜோதி கிருஷ்ணசாமி, துணை தலைவர் நபிஷாபேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆத்தூர்

ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்