ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் குடும்பநல ஆண் கருத்தடை சிகிச்சை (வாசக்டமி) இரு வார விழாவையொட்டி ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரத பயணம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் குடும்பநல ஆண் கருத்தடை சிகிச்சை (வாசக்டமி) இரு வார விழாவையொட்டி ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரத பயணம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விழிப்புணர்வு ரதத்தை தொடங்கி வைத்தார். இந்த ரதம் மூலம் மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் அன்புசெழியன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் பன்னீர்செல்வம், வட்டார சுகாதார புள்ளியியலாளர் சுகுமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.