மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்க வேண்டும் கோபியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்க வேண்டும் என்று கோபியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினாா்.;
கோபி அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மாணவ- மாணவிகள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-படைப்பாற்றல் இருப்பவர்களுக்கு தான் தற்போது வேலை கிடைக்கும். உலகின் மிகப்பெரிய அதிசயம் தமிழ் மொழி. அது நம் தாய் மொழி. அதை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தமிழ் மொழி, ஆங்கிலம் மொழி, கணினி மொழி, உடல் மொழி ஆகிய 4 மொழிகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அதிகம் கற்றுக்கொண்டே இருக்க கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மனதில் ஆசை இருக்கும் வரை யாரும் ஏழை இல்லை. மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்று மனதில் பேராவல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினாா்.
முன்னதாக அவர் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.