மனுநீதி நாள் முகாமில் 362 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

இமாபுரம், மும்முனி, வல்லம், வண்ணாங்குளம் ஆகிய இடங்களில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 362 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் வழங்கினர்.

Update: 2022-09-14 18:46 GMT

இமாபுரம், மும்முனி, வல்லம், வண்ணாங்குளம் ஆகிய இடங்களில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 362 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் வழங்கினர்.

மனுநீதி நாள் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா இமாபுரம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு சேத்துப்பட்டு சமூக நல பாதுகாப்பு தாசில்தார் குமரவேல் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாண்டுரங்கன், பெரணமல்லூர் ஒன்றிய வட்டார அலுவலர்கள் மோகனசுந்தரம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் அலுவலர் சுப்பிரமணி, இமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பூவண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு உதவி கலெக்டர் வினோத்குமார் கலந்துகொண்டு, 112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்கம் மைய உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் நித்தியகல்யாணி, நாராயணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், வேளாண்மை அலுவலர் மதன்குமார், பெரிய கொழப்பலூர் வேளாண்மை உதவி அலுவலர் பாபு, வேளாண்மை அலுவலர் ராஜாராம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன் நன்றி கூறினார்.

மும்முனி


வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு தாசில்தார்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மாவட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கி, 128 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் கலைவாணி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், மருத்துவர் பூவிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் சுகந்திவேலு, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வல்லம்


வல்லம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு வேலூர் மாவட்ட கலால் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் தாசில்தார் செந்தில் வரவேற்றார்.

முகாமில் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வல்லம் சிவக்குமார், கீழ்பள்ளிப்பட்டு விஜயபாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் பூமா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், கால்நடை மருத்துவர் ஹேமலட்சுமி, கம்மவான்பேட்டை மருத்துவ அலுவலர் சந்திரசேகர், தீயணைப்பு அலுவலர் தணிகைவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வண்ணாங்குளம்


கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு ஆரணி ஒன்றியக் குழு தலைவர் பச்சியம்மாள் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா விக்னேஷ், ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு வரவேற்று பேசினார்.

இந்த முகாமில் கடந்த மாதம் 24-ந்தேதி ஆரணி தாசில்தார் ஜெகதீசன், பொதுமக்களிடமிருந்து 161 கோரிக்கை மனுக்கள் பெற்றார். அதில் தற்போது 62 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. 41 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 52 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என தாசில்தார் ஜெகதீசன் தெரிவித்தார்.

வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி, மண்டல துணை தாசில்தார் திருவேங்கடம், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் மோகன், துரைமாமது, வண்ணாங்குளம் துணை தலைவர் சுகுணாதுரை, ஊராட்சி செயலர் தயாளன், கிராம நிர்வாக அலுவலர்கள் பொன்னி, ரமேஷ், கார்த்திக், கோபிநாத், ஜேம்ஸ், பொற்கொடி, குப்பன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வண்ணாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்