அறுவை சிகிச்சையால் கால் இழந்த கால்பந்து வீராங்கனை - அரசுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை

கொளத்தூர் அரசு மருத்துவமனையின் அலட்சியமே கால் இழக்க காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.;

Update:2022-11-09 18:25 IST

சென்னை,

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.

சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்து.

இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர்.

ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கி குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டும். இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர். இதனை தொடர்ந்து கால்பந்து வீராங்கனையின் கால்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிகைக்கை விடுத்துள்ளனர்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்