சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பாளையங்கோட்டையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-27 19:51 GMT

பாளையங்கோட்டை:

நெல்லை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் செபத்தியாள் என்ற ஜெயா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மருதுபாண்டி, மகபூப் பாஷா, லட்சுமி, ஜெலட்டின் மேரி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்த வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட சத்துணவு பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்