முதியோர் இல்லத்தில் உணவு
கூட்டாம்புளி முதியோர் இல்லத்தில் உணவு- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஏற்பாடு
சாயர்புரம்:
இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி ஒன்றியம் சார்பாக கூட்டாம்புளி அன்பு முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் என்ற சுரேஷ் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெரியதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் முகேஷ், மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் பிரகாஷ், ஒன்றிய தொழிற்சங்க தலைவர் தேசிங்கு ராஜா, தொண்டரணி செயலாளர் ராம் தேவேந்திரன், இளைஞரணி தலைவர் ஜோஸ்வா, சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.