கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update:2022-06-25 13:47 IST

செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் அவசியம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் உரிய சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. மேலும் உடல் வெப்பநிலையை அறியும் வெப்பநிலைமானி கருவி மூலம் கண்காணிக்க வேண்டும்.


பொதுமக்கள் அனைவரும் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதாலும், முறையாக முக கவசம் அணிவதன் மூலமும் பொது இடங்களில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதன் மூலமாகவும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் (காய்ச்சல், தொண்டை வலி, நாவில் ருசி தெரியாமல் இருந்தால்) அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளை அணுகுங்கள். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்