கோவையில் பூக்கள் விலை உயர்ந்தது

ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2022-10-02 18:45 GMT


ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூ மார்க்கெட்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் தினமும் டன் கணக்கில் கொண்டு வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இங்கு பூக்கள் வரத்தை பொறுத்து அவற்றின் விலை காலை மற்றும் மாலை என 2 முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் பூ மார்க்கெட்டில் பண்டிகை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களுக்கு முந்தையை நாளில் அதிகளவு பூக்கள் விற்பனை ஆகும். பூக்களை வாங்க பொதுமக்கள் மட்டுமின்றி உள்ளூர், வெளியூர் வியாபாரிகளும் வந்து குவிந்த வண்ணம் இருப்பார்கள். தற்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகளவு உள்ளது.

மேலும் உயர வாய்ப்பு

மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை, நாளை மறுநாள் (புதன்கிழமை) விஜயதசமியையொட்டி வரத்து குறைவு என்பதாலும், நுகர்வு அதிகரிப்பு என்பதாலும் கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் சிலர் பூக்களை நேற்றே வாங்க அங்கு குவிந்தனர். இதனால் நேற்று பூக்கள் விற்பனை களைகட்டியது. அதன்படி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ரூ.500-க்கு விற்பனையான மல்லி நேற்று ஒரு கிலோ ரூ.800 முதல் 1,000 வரை விற்பனையானது. மற்ற பூக்களின் விலை நிலவரம்(கிலோவில்):- ஜாதி மல்லி ரூ.800, செவ்வந்தி ரூ.400, பட்டன் ரோஜா ரூ.320, அரளி ரூ.400, கோழிக்கொண்டை பூ ரூ.100, நந்தியா வட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100. மேலும் பூக்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தாமரை(ஒன்று) ரூ.20, மருகு (ஒரு கட்டு) ரூ.30, மரிகொழுந்து(ஒரு கட்டு) ரூ.30, பனை ஓலை(ஒன்று) ரூ.5, வாழை குலை(ஒன்று) ரூ.20, எலுமிச்சை(ஒரு கிலோ) ரூ.160-க்கு விற்பனையானது. 

Tags:    

மேலும் செய்திகள்