முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதி பொதுமக்கள் பூக்களை தட்டுகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அம்மன் முன்பு பூக்களை கொட்டினர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து வருகிற 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்க உள்ளது. பின்னர் மண்டகபடிதாரர்கள் சார்பில் தினந்தோறும் சிறப்பு வழிபாடும், வீதி உலாவும் நடைபெற உள்ளது. 28-ந் தேதி பொங்கல் விழாவும், 29-ந் தேதி தேரோட்டமும், 30-ந் தேதி மஞ்சள் விளையாட்டு விழாவும் நடைபெற உள்ளது.