கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை
கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் படப்பையில் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் தலைமையில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றப்பட்டு கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வினோத் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.