10 ஆண்டுகளாக முழுமையாக செயல்படாத மலர் சந்தை - ஆக்கிரமித்துள்ளதாக புகார்
ஶ்ரீரங்கத்தில் கடந்த10 ஆண்டுகளாக தினசரி மலர் சந்தை முழுமையாக செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஶ்ரீரங்கம்,
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட தினசரி மலர் சந்தை முழுமையாக செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மறைந்த ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது 100 கடைகளுடன் தினசரி மலர் சந்தை ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. ஆனால் போதிய இடவசதி இல்லாததால் அந்த இடத்தில் பூக்களை விற்பனை செய்ய வியாபாரிகள் மறுப்பு தெரிவத்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக பழைய மலர் சந்தையில் பூக்கள் விற்பனை செய்யப்படுவதால் சுகாதார சீர்கேடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மலர் சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.