ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைவு

நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் பாறை திட்டுகள் வெளியே தெரிகின்றன.

Update: 2023-11-06 04:23 GMT

பென்னாகரம்,

தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை முற்றிலும் குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2,000 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் பாறை திட்டுகள் வெளியே தெரிகின்றன.

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்