காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பெரியபள்ளிப்பாளையத்தில் 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதம்

வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்த பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் வாழை தோட்டங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.

Update: 2022-08-05 10:35 GMT

திருச்சி,

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பெரியபள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்த பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் வாழை தோட்டங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.

மேட்டூர் அணையில் மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர வாய்ப்புள்ளதால் வாழைத் தோட்டங்களுக்கும் மேலும் சேதம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே சேதத்தின் அளவை கணக்கீடு செய்து அதற்கான இழப்பீடு தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்