கொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தில் வெள்ளம் - ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகனங்கள்

வெள்ள நீர் செல்லக்கூடிய தரைப்பாலத்தில் ஒரு சில வாகனங்கள் செல்வதும், சிறுவர்கள் விளையாடி மகிழ்வதும் தொடர்ந்து வருகிறது.

Update: 2022-12-13 10:13 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாதையை பயன்படுத்தி வரும் சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் ஆபத்தை உணராமல் வெள்ள நீர் செல்லக்கூடிய தரைப்பாலத்தில் ஒரு சில வாகனங்கள் செல்வதும், சிறுவர்கள் விளையாடி மகிழ்வதும் தொடர்ந்து வருகிறது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு அவ்வழியே வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்