8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - மீன் வியாபாரி கைது

தலைமறைவாக இருந்த மீன் வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-07-25 05:37 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பீர் முகமது (வயது 62), மீன் வியாபாரி. இவர் சம்பவத்தன்று அவரது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் நைசாக பேசியுள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் தனது வீட்டில் கறிவேப்பிலை உள்ளது என்றும், அதை உனது வீட்டுக்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து அந்த சிறுமி அவரின் வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது பீர்முகமது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதனால் பீர் முகமது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பீர்முகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்