பழவேற்காட்டில் 3-வது நாளாக மீனவர்கள் போராட்டம்
பழவேற்காட்டில் 3-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.;
பொன்னேரி அடுத்த பழவேற்காடு மீனவர்கள் 250 பேர் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், பேச்சு வார்த்தை மூலம் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை நடந்த 4 மாதங்கள் ஆன நிலையில் எந்த விதமான நட வடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த இரு தினங்களாக தனியார் துறைமுகங்களை முற்றுகையிட்டு துறைமுக நுழைவு வாயின் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நட த்தினர். இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக பழவேற்காடு மீனவர்கள் பழவேற்காடு ஏரியின் மீது உள்ள மேம்பாலத்தில் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.