கூடுதாழையில் மீனவர்கள் தொடர் போராட்டம்
கூடுதாழையில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திசையன்விளை:
உவரி அருகே கூடுதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கடந்த 11-ந்தேதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று 17-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. கடற்கரை பந்தலில் போராட்ட குழு தலைவர் ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் பா.ஜ.க. மீனவர் அணி மாநில செயலாளர் ஜோன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.