தூத்துக்குடியில்மீனவருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில்மீனவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
தூத்துக்குடி, பூபாலராயர்புரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் நஜிம்கான் (வயது 42). மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு கருப்பட்டி சொசைட்டி அருகில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி திடீரென மறைத்து வைத்து இருந்த கத்தியால் நஜிம்கானை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நஜிம்கான் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.