மீன்களை வளர்த்தெடுத்து கடல் இருப்பு செய்யும் திட்டம்: பழவேற்காட்டில் 3 ஆயிரம் மீன்குஞ்சுகளை கடலில் விட்ட மீன்வளத்துறை

மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் மீனவர்கள் நலன் கருதி கடலில் மீன்களை வளர்த்தெடுத்து கடலில் இருப்பு செய்யும் திட்டத்தின் படி 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.;

Update:2023-09-26 20:10 IST

மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் மீனவர்கள் நலன் கருதி கடலில் மீன்களை வளர்த்தெடுத்து கடலில் இருப்பு செய்யும் திட்டத்தின் படி 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி பழவேற்காட்டில் காட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாங்கல்பெரும்புலம் ஊராட்சியில் அடங்கிய சாத்தாங்குப்பம் கிராமம் அருகே உள்ள கடலில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் சந்திரா 3 ஆயிரம் கொடுவா மீன் குஞ்சுகளை விட்டு கடலில் இருப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், லைட்அவுஸ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், பழவேற்காடு மீன் விற்பனை கூட்டுறவு இணைய முன்னாள் தலைவர் நாராயணன் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்