வேலூர் மத்திய ஜெயில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி

வேலூர் மத்திய ஜெயில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி நடந்தது.

Update: 2023-07-15 18:18 GMT

வேலூர் மத்திய ஜெயில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி நடந்தது.

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகள் என்று 900-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க ஆண்கள், பெண்கள் ஜெயிலில் பணிபுரியும் காவலர்கள், அலுவலர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமை வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். ஆண்கள் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார்.

முகாமில் இந்திய மருத்துவ சங்கம் வேலூர் கிளை சார்பில் டாக்டர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு கைதிகள் திடீரென மயங்கி விழுந்தால் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் வேலூர் ஆண்கள், பெண்கள் மத்திய ஜெயில் காவலர்கள், அலுவலர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்