தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டில் ஏற்படும் காயங்களை சரி செய்ய முதலுதவி பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டில் ஏற்படும் காயங்களை சரி செய்ய முதலுதவி பயிற்சி

Update: 2022-11-19 20:16 GMT


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை மாவட்டத்தின் சார்பாக, விளையாட்டு காயங்களை அடையாளம் காணும் மேலாண்மை, முதலுதவி குறித்த பயிற்சி நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னை ஆலோசகர் மற்றும் விளையாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.லியோனடர் பொன்ராஜ் பயிற்சி அளித்தார். பயிற்சியில் மதுரை, திருச்சி மற்றும் நெல்லை மண்டலங்களுக்கு உட்பட்ட மண்டல முதுநிலை மேலாளர்கள், 17 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்கள், நிரந்தர, ஒப்பந்த மற்றும் பகுதிநேர பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். மேலும் மதுரை விளையாட்டு விடுதியில் தங்கி தடகள, கூடைப்பந்து, வாலிபால், ஆக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சிபெறும் 70 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாட்டில் ஏற்படும் காயங்களை சரி செய்வது குறித்து தெரிந்து கொண்டனர். முன்னதாக நெல்லை மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன், மதுரை மண்டல முதுநிலை மேலாளர் பியூலா ஜேன் சுசிலா மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா, விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்