சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து - 5 பேர் படுகாயம்

வெடி விபத்தில் குடோன் உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.;

Update:2024-05-06 20:32 IST

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ரசாயன மூலப்பொருள் தயாரிப்பு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த vipaththuகுறித்து  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


 

Tags:    

மேலும் செய்திகள்