தீமிதி திருவிழா

மன்னார்குடி அக்கரை மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-09-10 18:45 GMT

மன்னார்குடி கீழப்பாலம் பாமணி ஆற்றின் கீழ் கரையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆவணி ஞாயிற்றுக் கிழமையையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் உள்ளிட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்