மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம்

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.;

Update:2023-07-15 00:15 IST

சுரண்டை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மற்றும் சுரண்டை தீயணைப்பு நிலையம் இணைந்து நடத்திய தீ தடுப்பு பயிற்சி முகாம் கல்லூரியின் கனிவேலவன் கலையரங்கத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் வீரபத்திரன், செல்வகணபதி, பிரான்சிஸ் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்றார். நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் வீரர்கள் மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்