தீ தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்கம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்கம் நடைபெற்றது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் செயல் விளக்கம் நேற்று நடந்தது. கல்லூரி டீன் திருமால்பாபு தலைமை தாங்கினார். மருத்துவமணை கண்காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு படையினர், தீ விபத்தை எப்படி தடுப்பது என்று செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.