மலையில் தீ விபத்து

சுங்கான்கடை அருகே மலையில் தீ விபத்து

Update: 2023-02-17 18:45 GMT

அழகியமண்டபம், 

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கான்கடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலையில் நேற்று மதியம் 2 மணியில் திடீரென தீ பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மள... மள...வென பரவி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிந்தது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்