கெங்கவல்லியில் குடிசை தீப்பிடித்து எரிந்தது

கெங்கவல்லியில் குடிசை தீப்பிடித்து எரிந்தது;

Update:2022-06-11 02:22 IST

கெங்கவல்லி,

கெங்கவல்லி அருகே நடுவலூரை சேர்ந்தவர் கந்தசாமி. கூலித்தொழிலாளி. இவரது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் குமார் அங்கு வந்து பாதிக்கப்பட்ட கந்தசாமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் கியாஸ் அடுப்பு, சிலிண்டர் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் செய்திகள்