பெரும்பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ

பெரும்பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.

Update: 2023-04-01 20:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தடியன்குடிசை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதிகளில் கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள செடி, கொடி, புற்கள் காய்ந்து வருகின்றன. இங்கு காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி பெரும்பாறை-சித்தரேவு மலைப்பாதையில் உள்ள ஏணிக்கல் என்ற இடத்தில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வத்தலக்குண்டு வனவர் சுரேஷ் தலைமையில், வனக்காப்பாளர் கணேசன் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் அப்பகுதியில் உள்ள காட்டெருமை, கடமான், பறவைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தன.

Tags:    

மேலும் செய்திகள்