தீயணைப்பு முறை செயல் விளக்க நிகழ்ச்சி

தீயணைப்பு முறை செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-07-12 19:00 GMT

கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு முறை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டால், அதனை உடனே அணைப்பது எப்படி? தீக்காயம் ஏற்படாமல் தற்காத்து கொள்வது எப்படி? தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றலாம்? போன்றவை குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதை டாக்டர்கள், செவிலியர்கள் பார்வையிட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்