கிராம நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து; ஆவணங்கள் சேதம்

நெல்லையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.

Update: 2022-09-21 19:28 GMT

நெல்லையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.

கிராம நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து

நெல்லை டவுன் தென்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும், நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ஆவணங்கள் சேதம்

இதில், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் கிடந்த குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததும், அப்போது காற்று பலமாக வீசியதால், அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு தீ பரவியதும் தெரிய வந்தது.

தீ விபத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் மேஜையில் இருந்த ஆவணங்கள், விண்ணப்பங்கள் போன்றவை எரிந்து சேதமடைந்தன.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்