வீரபாண்டி அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ

வீரபாண்டி அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது

Update: 2022-06-16 17:43 GMT

வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி விலக்கு- தப்புகுண்டு சாலையில் அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது. தினமும் பணியாளர்கள் மூலம் மக்கும், மக்காத குப்பை என்று பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் குவிக்கப்பட்ட குப்பைகளில் தீப்பற்றி எரிந்து புகை மண்டலம் உருவானது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அல்லிநகரம் நகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று வேகமாக அடித்து தீ பற்றி எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் நகராட்சி சார்பில் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்