வாகன உதிரிபாகங்கள் கடையில் தீ விபத்து
வாகன உதிரிபாகங்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இனாம் சமயபுரம் காவல்கார தெருவை சேர்ந்தவர் அப்பாஸ்அலி (வயது 38).இவர் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை அருகே ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை அவரது கடையிலிருந்து புகை வந்தது. இதை கண்ட அந்த பகுதியினர் சமயபுரம் தீயணைப்பு நிலையம் மற்றும் அப்பாஸ் அலிக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சமயபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.