திருவள்ளூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-23 21:51 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் அருகே நள்ளிரவு பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

7க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்தின் போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளாதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்